ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிதம்பரத்தில் தமாகா சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா

சிதம்பரத்தில் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கீழரதவீதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
சிதம்பரத்தில் தமாகா சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
Updated On :15 ஜூலை 2021, 8:17 am

DIN

சிதம்பரம்: சிதம்பரத்தில் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கீழரதவீதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் எம்.என்.ராதா, மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.வைத்தி, கே.நாகராஜ், ராஜா சம்பத்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் கே.ரஜினிகாந்த், மாவட்ட தொண்டரணி தலைவர் தில்லை குமார், மகளிரணி ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளராக தமாகா மாநில பொதுச்செயலாளர் செயலாளர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் பங்கேற்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிதம்பரம் நகரில் வார்டு 2, 33, 25  ஆகிய வார்டுகளில் தமாகா கொடியேற்றப்பட்டது. 
நிகழ்ச்சிகளில் மாவட்ட மாணவரணி தலைவர் என்.மணிகண்டன்,இளைஞரணி ராஜ்குமார், தில்லை ராஜா, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் ஜனகம், மீனா செல்வம், மகளிரணி தில்லைசெல்வி, எஸ்.எஸ்.நடராஜன், சின்ராஜ்,  பட்டாபிராமன், சம்பந்தமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.