சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

காவிரி ஆணையத்தின் அனுமதியின்றி அணை கட்ட முடியாது: மத்திய அமைச்சர் உறுதி

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அனுமதியின்றி காவிரி ஆற்றில் அணை கட்ட முடியாது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

News image
தில்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்த அனைத்துக் கட்சி உறுப்பினர்கள்.
Updated On :16 ஜூலை 2021, 9:15 am

DIN

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அனுமதியின்றி காவிரி ஆற்றில் அணை கட்ட முடியாது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேக்கேதாட்டு அணை எதிர்த்து மத்திய அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அணைத்துக் கட்சி உறுப்பினர்களும் தில்லி சென்றுள்ளனர்.

இன்று காலை தமிழக நீர்வள அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான உறுப்பினர்கள் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவாதை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது பேசிய அமைச்சர், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அனுமதியின்றி காவிரி ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது என உறுதியளித்தார்.

தில்லி சென்றுள்ள அனைத்துக் கட்சி குழுவில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் கோபண்ணா, அதிமுக ஜெயக்குமார், பாமக ஜி.கே.மணி, மதிமுக வைகோ, விசிக திருமாவளவன், பாஜக பால்கனகராஜ், சிபிஐ என்.பெரியசாமி, சிபிஎம்  கே.பாலகிருஷ்ணன், மமக ஜவாஹிருல்லாஹ், தவாக வேல்முருகன், கொமக சின்னராஜ், புரட்சி பாரதம் ஜகன்மூர்த்தி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.