ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மேக்கேதாட்டுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கீழையூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

கீழையூரில், விவசாய சங்கம் சார்பில் மேக்கேதாட்டுவில், அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

News image

மேக்கேதாட்டுவில் அணைக் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Updated On :17 ஜூலை 2021, 10:03 am

கீழையூரில், விவசாய சங்கம் சார்பில் மேக்கேதாட்டுவில், அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்  சார்பில், கீழையூர் கடைத்தெரு பகுதியில் மேக்கேதாட்டுவில் சட்டவிரோதமாக அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அதற்கு துணைப் போகும் மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கே. கிருஷ்ணன் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் கோவை.சுப்பிரமணியன் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஏ. முருகையன் ஆகியோர் பங்கேற்று   கண்டன உரை நிகழ்த்தினார்.

உடன் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ஏ.உமாநாத், விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் எம். ரவி, ஆர். அன்பழகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் டிக்ஷ வெங்கட்ராமன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஊனமுற்றோர்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் ஒன்றிய செயலாளர் என். பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், மேக்கேதாட்டுவில் சட்டவிரோதமாக அணை கட்ட முயற்சிப்பதை கைவிட வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.