ஹர்ஷல் படேலை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விற்ற ஹைதராபாத்..! ரூ.4 கோடி நஷ்டம்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்த ஹர்ஷல் படேல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மாறியது குறித்து...

Harshal Patel

ஹர்ஷல் படேல் - படம்: ஐபிஎல்

Updated On :

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்த வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு டிரேடிங் மூலம் மாறியுள்ளார்.

இன்றுடன் (நவ.17) தக்கவைக்கப்படும் ஐபிஎல் வீரர்கள் அறிவிக்கப்படும் நிலையில், இந்த டிரேடிங் முக்கியத்தும் பெற்றுள்ளது.

உலக அளவிலான டி20 கிரிக்கெட்டில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் அதிகம். வணிக அளவிலும் முதலிடம் பிடித்துள்ளது.

ஐபிஎல் 2027 சீசனுக்கான வீரர்கள் இன்றுடன் (நவ.17) தக்கவைக்கப்படும், வெளியேற்றப்படும் வீரர்கள் அறிவிக்க இருக்கிறார்கள். அடுத்ததாக மினி ஏலம் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், 35 வயதான வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்துள்ளார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட இவரை ரூ.4 கோடிக்கு விற்றுள்ளது.

இரண்டு முறை பர்பிள் கேப் விருது வென்ற ஹர்ஷல் படேல் குஜராத் அணிக்கு மாறியுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஹர்ஷல் படேல் 2012ல் அறிமுகமானார். இதுவரை 124 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 151 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு விளையாடியுள்ளார்.

கடந்த ஐபிஎல் 2025ல் 13 போட்டிகளில் 16 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். கடைசி 2026 சீசனில் அவருக்குப் பதிலாக இளம் வீரர்களை பிளேயிங் லெவனில் சன்ரைசர்ஸ் அணி பயன்படுத்தியது.

கடந்த சீசனில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் விக்கெட் எடுக்காமல் இருந்தார். இந்த நிலையில், இந்த மாற்றம் எடுக்கப்பட்டுள்ளது.

Summary

Harshal Patel traded to Gujarat Titans from Sunrisers Hyderabad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.