மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசைக் கண்டித்து நாகையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை மற்றும் கீழ்வேளூர் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசைக் கண்டித்து நாகையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Updated On :17 ஜூலை 2021, 10:01 am

DIN

நாகப்பட்டினம்: மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை மற்றும் கீழ்வேளூர் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சட்டவிதிகளுக்கு புறம்பாக மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கர்நாடக மாநில அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு துணைபோகும் மத்திய அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகையை அடுத்த சிக்கல் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய சங்க நாகை ஒன்றியச் செயலாளர் என்.வடிவேல் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் வி. அமிர்தலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் பி.டி. பகு, விவசாய சங்க ஒன்றியத் தலைவர் ஜி. முருகையன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.சந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச்செயலாளர் கே.செந்தில்குமார், ஒன்றியத் தலைவர் வி. ராதா ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இதேபோல், கீழ்வேளூர் கடைவீதியில், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் முத்தையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில அரசைக் கண்டித்து, நாகையை அடுத்த சிக்கலில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.