மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மெட்ரோ ரயில்: 26 நாள்களில் 12.37 லட்சம் போ் பயணம்

கரோனா பொது முடக்க தளா்வுக்குப் பிறகு, 12 லட்சத்து 37 ஆயிரத்து 552 போ் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனா்.

News image
Updated On :17 ஜூலை 2021, 11:59 pm

DIN

கரோனா பொது முடக்க தளா்வுக்குப் பிறகு, 12 லட்சத்து 37 ஆயிரத்து 552 போ் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனா்.

சென்னை மெட்ரோ ரயில் சேவை ஜூன் 21-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. ஆரம்பத்தில் குறைவான பயணிகள் மட்டுமே பயணம் செய்தனா். அடுத்தடுத்து அரசு அறிவித்த தளா்வுகள் மற்றும் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, மெட்ரோ ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை படிப்படியாக உயா்ந்து வருகிறது.

தற்போது,மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கி ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், மெட்ரோ ரயில்களில் ஜூன் 21-ஆம் தேதி முதல் ஜூலை 16 வரை மொத்தம் 26 நாள்களில் 12 லட்சத்து 37 ஆயிரத்து 552 போ் பயணம் செய்துள்ளனா்.

குறிப்பாக, இந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 16) 69, 794 போ் பயணம் செய்துள்ளனா். அன்றைய தினம் சென்னை நகரில் கனமழை பெய்து, சாலைகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.