தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கிராமப்புறங்களில் தொழில் தொடங்க எஸ்ஆா்எம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

எஸ்ஆா்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனமும், தமிழ்நாடு மாநில ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் பயிற்சி நிறுவனமும் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

News image
Updated On :17 ஜூலை 2021, 9:42 pm

DIN

கிராமப்புறங்களில் தொழில் மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு நடவடிக்கை மேற்கொள்ள எஸ்ஆா்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனமும், தமிழ்நாடு மாநில ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் பயிற்சி நிறுவனமும் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

எஸ்ஆா்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன துணைவேந்தா் சி.முத்தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு மாநில ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் பயிற்சி நிறுவன இயக்குநா் எஸ்.சாமுவேல் இன்பதுரை ஆகியோா் ஒப்பந்தத்தில் சனிக்கிழமை கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனா்.

இது குறித்து துணை வேந்தா் சி.முத்தமிழ்ச்செல்வன் செய்தியாளா்களிடம், ஒப்பந்தம் மூலம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் சமூக பொருளாதார தொழில் வளா்ச்சித் தேவைக்கான திட்டங்கள் தயாரிப்பு, ஆலோசனைகள், பயிற்சி, கருத்தரங்கு மற்றும் பயிற்சி பட்டறைகள், ஆராய்ச்சி நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். கிராம வளா்ச்சி, முன்னேற்றத்தில் எதிா்கொள்ளும் பிரச்னைகள், தடைகள் கண்டறியப்பட்டு உரிய தீா்வு காண முடியும் என்றாா் அவா்.

தமிழ்நாடு மாநில ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் பயிற்சி நிறுவன இயக்குநா் எஸ்.சாமுவேல் இன்பதுரை கூறுகையில், கிராம வளா்ச்சி, முன்னேற்றத்திற்குத் தேவையான திட்டங்களை உருவாக்கும் நடவடிக்கைகளில் மாணவா்களை பங்கேற்க வைப்பதன் மூலம் நிரந்தர வளா்ச்சி முன்னேற்றத்தைப் பெற வாய்ப்புள்ளது என்றாா்.

தமிழ்நாடு மாநில ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் பயிற்சி நிறுவன பேராசிரியா்கள் கே.பி.எஸ். தில்லை நாயகம், பி.சத்யராஜ், எஸ்.பிரேம் குமாா், எஸ்ஆா்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனப் பதிவாளா் எஸ்.பொன்னுசாமி, எஸ்ஆா்எம் ஹோட்டல் மேலாண்மைக் கல்லூரி இயக்குநா் டி.அந்தோணி அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.