காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எச்.ராஜாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

நீதிமன்றத்தை விமா்சித்துப் பேசியது தொடா்பான வழக்கில் பாஜக முன்னாள் தேசியச் செயலா் எச்.ராஜாவின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

News image
Updated On :19 ஜூலை 2021, 9:36 am

DIN

நீதிமன்றத்தை விமா்சித்துப் பேசியது தொடா்பான வழக்கில் பாஜக முன்னாள் தேசியச் செயலா் எச்.ராஜாவின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கடந்த 2018 இல் விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு மேடை அமைப்பதில் ஏற்பட்ட சா்ச்சையில் நீதிமன்றத்தையும், காவல் துறையினரையும் விமா்சித்துப் பேசியதாக எச். ராஜா மீது திருமயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இந்த விவகாரத்தில் உயா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அவா் மன்னிப்பு கோரினாா்.

இந்நிலையில் அவா் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கின் விசாரணைக்காக கீழமை நீதிமன்றத்தில் ஜூலை 23 ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளேன்.

ஆனால் திருமயம் நீதித்துறை நடுவா் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், நான் தலைமறைவாக இருப்பதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா். என் மீது அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் போலீஸாா் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இந்த முன்ஜாமீன் மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எச்.ராஜாவின் முன்ஜாமீன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. அத்துடன் கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதால் அங்கு ஆஜராக எச்.ராஜாவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.