சசிகலாவால் ஒருபோதும் அதிமுகவை வீழ்த்த முடியாது: எடப்பாடி பழனிசாமி
சசிகலாவால் ஒருபோதும் அதிமுகவை வீழ்த்த முடியாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.


சசிகலாவால் ஒருபோதும் அதிமுகவை வீழ்த்த முடியாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் திமுக மக்களை ஏமாற்றி விட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றி விட்டது.
மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்பதால் இதனை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும்.
சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. அவர் அதிமுகவில் இருந்த காலகட்டத்திலும் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது.
கரோனா தடுப்பூசிகளை நாங்கள் வீணடிக்கவில்லை. ஆரம்பத்தில் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததாலேயே தடுப்பூசிகள் வீணாகின என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...