தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதுவையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: ஆளுநர் தமிழிசை தகவல்

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைப்போல, புதுச்சேரியிலும் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். 

News image
கல்லூரிகளில் தடுப்பூசி முகாமை தொடக்கிவைத்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
Updated On :20 ஜூலை 2021, 8:46 am

DIN

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைப்போல, புதுச்சேரியிலும் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். 

புதுச்சேரி அரசு பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் மாணவர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் கூறியதாவது:

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைப்போல், புதுச்சேரியிலும் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பான இந்த திட்டத்தை கொண்டு வந்த புதுவை முதல்வருக்கு பாராட்டுகள்.

அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பதற்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்தத் திட்டம் இருக்கும். புதுவையில் கல்லூரி மாணவர்களுக்காக அனைத்துக் கல்லூரிகளிலும் இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தடுப்பூசி செலுத்திகொள்ளும் மாணவிகள், தடுப்பூசி தூதுவர்களாக மாற வேண்டும். மற்றவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முழுமையாக தடுப்புசி செலுத்தி கொண்டபிறகு, கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.