கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பத்தில் வாவேர்பள்ளி, மஸ்ஜிதே இலாஹி, மைதீன் ஆண்டவர் பள்ளி, அஸிசி பள்ளி, டவுன் பள்ளி, ஹெளதியா ஆகிய பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் இஸ்லாமிய பொதுமக்கள் ஈடுபட்டனர்.
கரோனா தொற்று பரவல் என்பதால் ஈத்கா மைதானத்தில் கூட்டுத்தொழுகை நடத்த அனுமதியில்லாதலால், சமூக இடைவெளியை கடைபிடித்தும், சானிடைசர் பயன்படுத்தியும் தனித்தனி குழுக்களாக பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர், தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
கூடலூரில் உள்ள மைதீன் ஆண்டவர் பள்ளி வாசலில் ஜமாத் கமிட்டியினர் தனித்தனியாக சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதே போல் காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி ஆகிய பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீட்டு மனைப் பட்டா கோரி ஆட்சியரகத்தில் கிராம மக்கள் முறையீடு

கரூா் நிதி நிறுவனத்தில் திருடிய வழக்கில் தலைமறைவானவா் திருப்பூரில் கைது

கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
மாா்ச் 12-இல் தவெக ஆா்ப்பாட்டம்!
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

