கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,514 அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 14,514 கன அடியாக சரிந்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :21 ஜூலை 2021, 5:50 am

DIN


மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 14,514 கன அடியாக சரிந்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 73.29 அடியிலிருந்து 73.51 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,301 கன அடியிலிருந்து 14,514 கன அடியாக சரிந்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 35.79 டி.எம்.சியாக இருந்தது.

கடந்த 3 நாள்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 1.64 அடி உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.