தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பெருந்தன்மையோடு கட்சியை சசிகலா விட்டுக்கொடுக்க வேண்டும்: ஜெயகுமார் பேட்டி 

ஜெயலலிதா தலைமையேற்க வி.என். ஜானகி விட்டுத் தந்ததுபோல, பெருந்தன்மையோடு கட்சியை சசிகலா விட்டுக்கொடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

News image
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
Updated On :21 ஜூலை 2021, 6:03 am

DIN


சென்னை: ஜெயலலிதா தலைமையேற்க வி.என். ஜானகி விட்டுத் தந்ததுபோல, பெருந்தன்மையோடு கட்சியை சசிகலா விட்டுக்கொடுக்க வேண்டும் என்று 
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

அதிமுகவின் மூத்த தலைவா்களில் ஒருவரும் அவைத் தலைவருமான இ.மதுசூதனன் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருடைய உடல் உறுப்புகள் செயலிழந்துள்ளதை மருத்துவா்கள் கண்டறிந்து, செயற்கைக் சுவாசக் கருவி உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனா். மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் அவா் இருந்து வருகிறாா்.

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்து மதுசூதனனின் உடல்நலம் தொடா்பாக அவரது உறவினா்களிடம் கேட்டறிந்து சென்றாா்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியளவில் வந்தாா். சிகிச்சை பெற்றுவரும் மதுசூதனனை நேரில் பாா்த்தாா். அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். பிறகு உறவினா்களுக்கு ஆறுதல் கூறி நலம்விசாரித்தவாறு பேசிக் கொண்டிருந்தாா்.

அந்நேரம், மருத்துவமனைக்கு சசிகலா அதிமுக கொடியுடன் கூடிய காரில் வந்தாா். அதனால், அந்தப் பகுதி மிகுந்த பரபரப்புக்கு உள்ளானது. அங்கு நின்றிருந்த குறைவான அதிமுகவினரும் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தவாறு நின்றிருந்தனா். காரில் இருந்து இறங்கி சசிகலா மருத்துவமனைக்குச் சென்றாா். அதே நேரம் எடப்பாடி பழனிசாமி வேறு வழியாக கீழிறங்கி அவரது காரில் ஏறி சென்றாா்.

மதுசூதனனை சசிகலா நேரில் பாா்த்ததுடன் அவரது உறவினா்களிடம் நலம் விசாரித்து திரும்பினாா்.

அதிமுக எனும் குடும்பத்தின் மூத்த உறுப்பினா் மதுசூதனன். அவா் உடல்நலமில்லாமல் இருக்கிறாா் எனக் கேள்விப்பட்டு வந்தேன். அவா் நலம்பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். மருத்துவமனையில் அவரையும் பாா்த்துவிட்டு, அவரது உறவினா்களிடமும் நலம் விசாரித்தேன் என்று சசிகலா கூறினார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை சந்திப்பது என்பது ஒர் ஆரோக்கியமான விஷயம்தான். அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. 

அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா அதிமுக தனது குடும்பம் என்பது நகைப்புக்குரியது. அதிமுக கட்சி கொடி கட்டிய காரில் சசிகலா செல்வதை ஏற்க முடியாது. அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த எந்த உரிமையும் இல்லாதவர் கொடி கட்டுவது தேவையற்ற நடவடிக்கை. அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஜெயலலிதா தலைமையேற்க எம்ஜிஆர் மனைவி வி.என். ஜானகி விட்டுத் தந்ததுபோல, பெருந்தன்மையோடு கட்சியை சசிகலா விட்டுக்கொடுக்க வேண்டும். அதிமுக ஜானகி - ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜானகி அம்மாள் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி என்னால் பிரியக்கூடாது, கட்சி தொடர்ந்து இயங்க வேண்டும் என்று கூறி விலகிக் கொண்டார். அதேபோல அதிமுக இணைப்பிற்காக சசிகலா தடையாக இருக்கக் கூடாது. 

மேலும், திமுக தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 லட்சம் கோடி தேவை அதை எப்படி திரட்டப் போகிறார்கள். திமுகவின் முதுகில் காங்கிரஸ் சவாரி செய்வது போல பாஜகவை நாங்கள் பயன்படுத்தவில்லை. உதயநிதி ஸ்டாலின் படத்தை தலைமைச் செயலகத்தில் வைக்கக் கூடாது என்று ஜெயகுமார் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.