ஒட்டன்சத்திரம் பகுதியில் ஏற்கனவே காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் திண்டுக்கல் மாவட்டத்தில் வரதமாநதி, பொருப்பலாறு, பரப்பலாறு போன்ற நீர்தேக்கங்கள் உள்ளன. அதிலிருந்து குடிநீர்த் தேவைக்கு தண்ணீர் எடுக்கலாம். ஏற்கனவே நடைமுறையில் உள்ள காவிரி குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தலாம். இதைவிடுத்து தண்ணீருக்காக போராடிக்கொண்டிருக்கும் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் வயிற்றில் அடிப்பதுபோல இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த நினைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்தத் திட்டம்
செயல்படுத்தப்படுமானால் திருப்பூர், கோவை மாவட்ட விவசாய சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.