வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தமிழகத்தில் புதிதாக 1,785 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் புதிதாக 1,785 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :26 ஜூலை 2021, 2:29 pm

DIN


தமிழகத்தில் புதிதாக 1,785 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2,361 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் 21 பேர், தனியார் மருத்துவமனைகளில் 5 பேர் உள்பட மொத்தம் 26 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 33,937 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,50,282 ஆக உயர்ந்துள்ளது. இதில் 24,93,583 பேர் குணமடைந்துவிட்டனர்.

இன்றைய நிலவரப்படி 22,762 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக கோவையில் 164 பேரும், ஈரோட்டில் 127 பேரும், சென்னையில் 122 பேரும்,  சேலத்தில் 102 பேரும், தஞ்சாவூரில் 103 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,36,505 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.