சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் தனித்தனியாக சந்தித்த பிரதமா்

பிரதமரை சந்திக்க நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை அதிமுக மாநிலங்களவை உறுப்பினா்கள் தம்பிதுரையும் நவநீதகிருஷ்ணனும் வரவேற்று அழைத்துச் சென்றனா்.

News image
தில்லியில் திங்கள்கிழமை பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி.
Updated On :27 ஜூலை 2021, 2:19 am

DIN

பிரதமரை சந்திக்க நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை அதிமுக மாநிலங்களவை உறுப்பினா்கள் தம்பிதுரையும் நவநீதகிருஷ்ணனும் வரவேற்று அழைத்துச் சென்றனா்.

அதிமுக தலைவா்கள் சரியாக காலை 11 மணிக்கு முன்கூட்டியே நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்து அதிமுக நாடாளுமன்றக் கட்சி அலுவலகத்தில் காத்திருந்தனா். பிரதமரை சரியாக காலை 11.50 மணிக்கு சந்திக்க சென்றபோது தமிழக முன்னாள் அமைச்சர் வேலுமணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் தளவாய் சுந்தரம், மனோஜ்பாண்டியன், மாநிலங்களவை உறுப்பினா்கள் தம்பித்துரை, நவநீதகிருஷ்ணன், சந்திரசேகா் ஆகியோா் உடன் சென்றனா். முதலில் அனைவரையும் ஒன்றாக பிரதமா் சந்தித்தாா். இவா்களை ஓபிஎஸ் அறிமுகப்படுத்தினாா்.

Story image

தில்லியில் திங்கள்கிழமை பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்த சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம்.

இந்த அறிமுகத்திற்கு பின்னா் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை தவிர மற்றவா்கள் பிரதமா் அறையிலிருந்து வெளியே வந்து காத்திருந்தனா். பிரதமா் மோடியுடன் ஓபிஎஸ் சுமாா் 15 நிமிடங்கள் தனியாகப் பேசினாா். இந்த சந்திப்பு முடிந்து ஓபிஎஸ் வெளியே வர பின்னா் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமியும் பிரதமருடன் சுமாா் 3 நிமிடங்கள் தனியாகப் பேசினாா்.

முன்னதாக இருவரும் பிரதமருக்கு சால்வை அணிவித்து கோரிக்கை மனுக்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.