ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கூத்தாநல்லூர் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர மற்றும் கிளைகளுக்கான எல்.டி.பி.ஐ. கட்சியின் புதிய நிர்வாகிகளின் தேர்வு நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூலை 2021, 10:34 am

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர மற்றும் கிளைகளுக்கான எல்.டி.பி.ஐ. கட்சியின் புதிய நிர்வாகிகளின் தேர்வு நடைபெற்றது.

புதிய நிர்வாகிகளின் தேர்வுக் கூட்டம் நகர அலுவலகத்தில் நடைபெற்றன. கூட்டத்திற்கு, மாவட்டப் பொதுச் செயலாளர் விலாயத் உசேன் மற்றும் மாவட்டச் செயலாளர் உமர் ஃபாரூக் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில், கூத்தாநல்லூர் நகரத் தலைவராக ஜெ. முஹம்மது ஜாஸ்மின், துணைத் தலைவர் கே.ஏ. அப்துல் கபூர், செயலாளர் ஹெச்.அபுதாஹிர், துணைச் செயலாளர்கள் ஏ.செய்யது தமீம், ஏ. முஹம்மது இபுராஹீம், பொருளாளர் பி.எம். உமர் ஜெகபர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதேபோல், கிளை நிர்வாகிகளாக, கூத்தாநல்லூர் கிளைச் செயலாளராக கே.ஏ.அஹ்மத்துல்லாஹ், லெட்சுமாங்குடி கிளைத் தலைவராக எஸ்.அஜ்மல்கான், கிளைச் செயலாளராக ஏ.ஹெச்.பைசல் கான், மரக்கடை கிளைத் தலைவராக ஏ.முஹம்மது ஜூபைர், கிளைச் செயலாளர் ஏ.யாசின் முஹம்மது உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், நகர செயற்குழு உறுப்பினர்களாக எம்.ஆர்.ஏ.ரியாஸ் அஹமது, வி.எம். ஜாஸிம், எம்.முஸ்தஃபா, பொதுக்குழு உறுப்பினர்களாக என்.கே.முஹம்மது அஸ் பாக். எம்.ஏ. முஹம்மது தவ்ஃபீக், எம்.முஹம்மது ஆரிஃப், தொகுதி பொதுக்குழு உறுப்பினர்களாக அய். ஜாஹிர் உசேன், எஸ்.சதாம் உசேன் மற்றும் ஜெ.தாஜுதீன் உள்ளிட்ட அனைவரும் 3 ஆண்டுகள் பணியாற்ற ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.