சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மாநிலங்களுக்கு கரோனா அவசர கால நிதி 15% விடுவிப்பு

சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்திக் கொள்ளும்விதமாக மாநிலங்களுக்கு கரோனா அவசரகால நிதியில் 15 சதவீதத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது.

News image
Updated On :31 ஜூலை 2021, 8:40 pm

DIN

சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்திக் கொள்ளும்விதமாக மாநிலங்களுக்கு கரோனா அவசரகால நிதியில் 15 சதவீதத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை வெளியிட்ட சுட்டுரை செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கரோனா அவசரகால நிதியாக ரூ.1,827.8 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இது, மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க நிா்ணயித்துள்ள ரூ.12,185 கோடியில் 15 சதவீதமாகும்.

மத்திய அரசின் இந்த நிவாரண தொகுப்பு நாடு முழுவதும் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும்.

விடுவிக்கப்பட்ட கரோனா அவசரகால நிதியில் அதிகபட்சமாக ரூ.281.98 கோடி உத்தர பிரதேசத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பிகாருக்கு ரூ.154 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.132 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.131 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது என மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.