புதுச்சேரியில் திரையரங்குகளுக்கு அனுமதி

புதுச்சேரியில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் திரையரங்குகளுக்கு அனுமதி
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தினசரி கரோனா பரவல் 100க்கு கீழ் குறைந்ததையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

புதிய தளர்வுகளின்படி, கரோனா தடுப்பு விதிமுறைகளுடன் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

100 பணியாளர்களுடன் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு நடத்தலாம். 

சுற்றுலாத் தலங்களில் கரோனா தடுப்பு விதிகளுடன் 50% பேர் வரை அனுமதிக்கலாம். மதுபானக் கடைகளுடன் இருக்கும் பார்கள் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com