தமிழகத்தில் புதிதாக 1,986 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 1,986 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தமிழகத்தில் புதிதாக 1,986 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 1,60,171 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1,986 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,59,597 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்துக்கு மேலும் 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வருகை
மேலும் 2,178 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 26 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 25,04,805 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 34,076 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இன்னும் 20,716 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
மாவட்டங்களில் அதிகபட்சமாக கோவையில் 246 பேரும், சென்னையில் 204 பேரும், ஈரோட்டில் 165 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 150-க்கும் குறைவான பாதிப்புகளே பதிவாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...