பர்கூர் மலைக்கிராம மக்களுக்கு காய்கறித் தொகுப்புகள்
பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மலைக் மக்களுக்கு காய்கறித் தொகுப்புகள் மற்றும் சிறுதானிய உணவுப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.


பவானி: பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மலைக் மக்களுக்கு காய்கறித் தொகுப்புகள் மற்றும் சிறுதானிய உணவுப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வற்ற முழு முடக்கத்தால் மலைப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவும் வகையில் அந்தியூர் பாசம் தொண்டு நிறுவனம் சார்பில் செயல் இயக்குநர் எஸ்.மூர்த்தி தலைமையில் மலைமக்களுக்கு காய்கறிகள், சிறுதானிய உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
பர்கூர் ஊராட்சி, தாமரைக்கரை, துருசாம்பாளையம், பெஜ்லெட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 250 மலைக்கிராமக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. தாமரைக்கரை வனக்குழுத் தலைவர் உச்சிரன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...