கரோனா தடுப்பு நடவடிக்கையாக மோட்டூர் பிரதான சாலை அடைப்பு
கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி அரசிராமணி பிரதான சாலையிலிருந்து மோட்டூர் வழியாக கல்வடங்கம் செல்லும் சாலையை ஊர் பொதுமக்கள் கம்பிவேலி கொண்டு அடைத்துள்ளனர்.


சங்ககிரி: கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அரசிராமணி பிரதான சாலையிலிருந்து மோட்டூர் வழியாக கல்வடங்கம் செல்லும் சாலையை ஊர் பொதுமக்கள் புதன்கிழமை கம்பிவேலி கொண்டு அடைத்து பாதுகாத்து வருகின்றனர்.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி கிராம மக்கள் மேலும் அப்பகுதியில் கரோனா தொற்று பரவாமல் இருக்க அரசிராமணி பிரதான சாலையிலிருந்து மோட்டூர் வழியாக கல்வடங்கம், வட்ராம்பாளையம், ஓக்கிலிபட்டி, தண்ணீர்தாசனூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையில் மோட்டூர் பகுதி ஊர் பொதுமக்கள் கம்பிவேலி அமைத்து தடுப்புகளை அமைத்து ஊரிலிருந்து யாரும் வெளி ஊர்களுக்கு செல்லாதவாறும், வெளிநபர்கள் ஊருக்குள் வராத வகையிலும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...