தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருநங்கைகளுக்கு இலவசப் பயணம்; மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்: அரசு

கருணாநிதி பிறந்தநாளையொட்டி தமிழக அரசு புதிய நலத்திட்டங்களை அறிவித்துள்ளது.

News image
Updated On :3 ஜூன் 2021, 8:55 am

DIN

கருணாநிதி பிறந்தநாளையொட்டி தமிழக அரசு புதிய நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. 

அதன்படி தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தென்சென்னையில் ரூ.250 கோடி மதிப்பில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.

மதுரையில் ரூ.70 கோடி மதிப்பில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு பயணச் சலுகை:

திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மகளிரின் நலன் கருதி அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற சலுகையை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக தற்போது மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் நகர்புற அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டவுடன் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.