மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

செஞ்சி அருகே நள்ளிரவில் கடத்திய 24 டன் ரேஷன் அரிசி  பறிமுதல்: இருவர் கைது

கர்நாடாகம் மாநிலம் பெங்களூருவுக்கு கடத்தயிருந்த 24 டன் ரேஷன் அரிசியை வளத்தி போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்துள்ளனர்.

News image

24 டன் ரேஷன் அரிசியை கடத்த பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் லாரி

Updated On :3 ஜூன் 2021, 6:45 am


செஞ்சி: கர்நாடாகம் மாநிலம் பெங்களூருவுக்கு கடத்தயிருந்த 24 டன் ரேஷன் அரிசியை வளத்தி போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்துள்ளனர்.

விழுப்புரம்  மாவட்டம்,  மேல்மலையனூர் தாலுக்காவிலுள்ள  மாவட்ட எல்லையான  ஞானோதயம் சோதனை சாவடியில் வளத்தி காவல் நிலைய போலீசார் தீவிர வாகன சோதனையின் போது நள்ளிரவில் சட்டவிரோதமாக செஞ்சியிலிருந்து பெங்களுருக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தயிருந்த 24 டன் எடைகொண்ட 4 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீஸார், இதுதொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் முரளி மற்றும் கிளினர் மணிகண்டனை கைது செய்தனர். 

வளத்தி காவல் நிலைய  சிறப்பு உதவி ஆய்வாளர் தேவேந்திரன்,  காவலர்கள் கார்த்திக், யுவராஜ் மணிகண்டன் ஆகியோர் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.