ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் நீர் திறப்பு: மு.க.ஸ்டாலின்
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேட்டூர் அணை நீர் திறப்பால் 8 மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
2021-2022 -ம் ஆண்டிற்கு காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
டெல்டா பகுதிகளில் 65.11 கோடி மதிப்பில் தூர் வாருதல் போன்ற 647 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால் கடைமடைப் பகுதி வரை மேட்டூர் அணையின் நீர் சென்று சேரும்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.13 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 61.43 சி.எம்.சியாகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...