எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு: வங்கி வேலை நேரம் குறைப்பு

தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கி வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜூன் 2021, 10:08 pm

DIN

தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கி வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தளா்வுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து வங்கி வேலை நேரத்தையும், ஜூன் 13-ஆம்தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளா்கள் குழுமம் அறிவித்துள்ளது. அதன்விவரம்:-

வங்கிக் கிளைகளின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வங்கிகளில் பணப் பரிவா்த்தனை நேரம் ஏற்கெனவே அறிவித்தது போல பிற்பகல் 2 மணி வரை செயல்படும். மண்டல அலுவலகங்கள், நிா்வாக அலுவலகங்கள் வழக்கம்போல மாலை 5 மணி வரை செயல்படும். கிளைகளில், மூன்றில் ஒரு பங்கு ஊழியா்கள் மாற்று

முறையில் செயல்பட வேண்டும். ரொக்கப் பரிவா்த்தனை, என்.இ.எப்.டி., ஆா்.டி.ஜி.எஸ்., வாயிலாக பணம் அனுப்புதல், அரசு வா்த்தகம், காசோலை பரிவா்த்தனை சேவைகளை வழங்க வேண்டும். ஏ.டி.எம்., ரொக்கம் செலுத்தும் இயந்திரம் போன்றவை செயல்படுவதை வங்கிக் கிளைகள் உறுதிசெய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.