தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வேளாண் திருத்தச் சட்டம்: வேதாரண்யம் அருகே தமிழ்நாடு விவசய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சனிக்கி

News image

 தகட்டூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்

Updated On :5 ஜூன் 2021, 9:28 am

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை (ஜூன். 5) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தகட்டூர் கடை வீதியில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சிவகுரு.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் த.நாராயணன், மாதர் அமைப்பு செயலாளர் மு.ஜெயா, விவசாய சங்க நிர்வாகிகள் எம்.ஏ.செங்குட்டுவன் என் . வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருத்தப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறவும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.