கட்டுமானப் பொருள்கள் விலை கடும் உயர்வு

கரோனா பொதுமுடக்கத்தால் கட்டுமானப்பொருள்களின் விலை திடீரென உயர்ந்துள்ளதால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதை
கட்டுமான பணிகள்
கட்டுமான பணிகள்


கரோனா பொதுமுடக்கத்தால் கட்டுமானப்பொருள்களின் விலை திடீரென உயர்ந்துள்ளதால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கட்டுமானப் பொருள்களுக்கு விலை நிர்ணய குழுவை அமைக்க கட்டுமான பொறியாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. 

கரோனா பொதுமுடக்க காலத்தில் சென்னையில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.370-க்கும் விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ரூ.520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு டன் கட்டுமான கம்பியின் விலை ரூ.68 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 

திருச்சியில் ஒரு மூட்டடை ரூ.410-இல் இருந்து ரூ.470 ஆக அதிகரித்துள்ளது. எம்-சாண்ட் ஒரு யூனிட் ரூ.3,600 -இல் இருந்து ரூ.4,000 ஆக அதிகரித்துள்ளது. 

முக்கால் அங்கு ஜல்லி ஒரு யூனிட் ரூ.2,500 இல் இருந்து ரூ.2,800 ஆகவும்,  ஒன்றரை அங்குல ஜல்லி ஒரு யூனிட் ரூ.2,400-இல் இருந்து ரூ.2,600 ஆகவும், செங்கல் ஒரு லோடு ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கட்டுமானப் பொருள்களின் விலை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கம் அமலால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வரும் சூழலில், நமது நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலையைத் தொடர்ந்து கட்டுமானப் பொருள்களின் விலையும் திடீரென 40 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு காரணமாக கட்டுமானப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் வேலைவாய்ப்பு இழப்பும் ஏற்பட்டுள்ளது.

கட்டுமானப் பொருள்களின் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய கட்டுமானப் பொருள்களுக்கு விலையை நிர்ணயிக்க விலை நிர்ணய குழுவை அமைக்க வேண்டும் என அரசுக்கு அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com