நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஜூன் 21ல் ஆளுநர் உரையுடன் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 21ஆம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு புதன்கிழமை அறிவித்தார்.

News image
சென்னை கலைவாணர் அரங்கம்.
Updated On :9 ஜூன் 2021, 1:09 pm

DIN

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 21ஆம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு புதன்கிழமை அறிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூன் 21ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது எனத் தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற உள்ளது. முன்னதாக பேரவைக்கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமவாய்ப்பு அளித்து பேரவைக் கூட்டத்தை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்புவதாகத் தெரிவித்த பேரவைத் தலைவர் அப்பாவு கூட்டத்தொடரை நேரலை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.