ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாள்களாகக் காணவில்லை: ப.சிதம்பரம்

தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாள்களாகக் காணவில்லை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

News image
ப.சிதம்பரம்
Updated On :9 ஜூன் 2021, 5:16 am

DIN


சென்னை: தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாள்களாகக் காணவில்லை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: 
தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி மருத்து இருப்பு இல்லை. தடுப்பூசி போடுவது ஜூன் 2 -ஆம் தேதியிலிருந்து ஏறத்தாழ மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டு்ள்ளது.

மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள் தாம் இந்நிலைக்கு முழு முதல் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள சிதம்பரம், 
‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என்று நாள் தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாள்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா? என்று சிதம்பரம் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.