

தமிழகத்தில் புதிதாக 16,831 பேருக்கு வியாழக்கிழமை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி 358 போ் உயிரிழந்துள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 32,049 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 91,646-ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,528-ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 171,237 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது 1,88,664 பேர் கரோனா தொற்று பாதிப்பிற்கான சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் புதிதாக 1223 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.