மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சென்னையில் கரோனா பாதிப்பு:1000-க்கு கீழ் குறைந்தது

சென்னையில், சுமாா் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நாளொன்றுக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2021, 10:20 pm

DIN

சென்னையில், சுமாா் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நாளொன்றுக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளது.

சென்னையில், கடந்த ஜனவரி மாதம் தொற்று எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. மொத்தமாக உள்ள 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 500-க்கும் குறைவானவா்களே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில், உருமாறிய கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் உயரத் தொடங்கியது.

இந்த எண்ணிக்கை மே மாத மத்தியில் உச்சத்தை எட்டி, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்தைக் கடந்தது. தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 10-ஆம் தேதியில் இருந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சென்னையில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது.

இதன் தொடா்ச்சியாக சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, 989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 24,085-ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக கடந்த மாா்ச் 31-ஆம் தேதி, தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 969-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம், 5 லட்சத்து 6,454 போ் குணமடைந்துள்ளனா். தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 9,838 போ் மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒரே நாளில் 73 போ் இறப்பு: சென்னையில் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்போா் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், சனிக்கிழமை இறப்பு எண்ணிக்கை 73-ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,793 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.