ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும்: புதிய மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்

திருப்பூர் மாநகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று புதியதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

News image

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்ட கிராந்திகுமார் ஐஏஎஸ்

Updated On :13 ஜூன் 2021, 7:42 am

DIN

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று புதியதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராகப் பணியாற்றி வந்த க.சிவகுமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் செயல் அலுவலராகப் பணியாற்றி வந்த கிராந்திகுமாரை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராக தமிழக அரசு நியமித்துள்ளது.

இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளராக கிராந்திகுமார் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படும். இதன்பிறகு மாநகராட்சி பகுதி பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும். மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படத்தன்மையுடன் செயல்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மண்டல உதவி ஆணையாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.