இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கரோனா விதிமுறைகளை மீறியதாக 3,973 வழக்குகள்; 1,881 வாகனங்கள் பறிமுதல்

கரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் நேற்று (13.06.2021) கரோனா ஊரடங்கு விதிமுறைகளை

News image
கரோனா விதிமுறைகளை மீறியதாக 3,973 வழக்குகள்; 1,881 வாகனங்கள் பறிமுதல்
Updated On :14 ஜூன் 2021, 10:24 am

DIN

கரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் நேற்று (13.06.2021) கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 3,973 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,881 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

முகக்கவசம் அணியாத 4,144 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 287 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 காலை வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில், கரோனா பரவலை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையாக, 24.5.2021 காலை முதல் 07.6.2021 காலை வரை தளர்வுகளில்லாத முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்த நிலையில், தமிழக அரசு 7.6.2021 காலை முதல் 14.6.2021 காலை வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. 

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், முறையான தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகள் செக்டார்களாக வகைப்படுத்தி உரிய சாலை தடுப்புகள் மற்றும் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து, மிக அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் செல்ல இ-பதிவு சான்று கட்டாயமாக்கப்பட்டு, இ-பதிவு வைத்திராத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் குழுவினர் நேற்று (13.6.2021) மேற்கொண்ட சோதனையில், கரோனா ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சென்றது தொடர்பாக 2,937 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 499 இருசக்கர வாகனங்கள், 10 ஆட்டோக்ள் மற்றும் 2 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 511 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் நேற்று (13.6.2021) மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், சென்னை பெருநகரில் கரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 1,036 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 1,325 இருசக்கர வாகனங்கள், 33 ஆட்டோக்கள் மற்றும் 12 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 1,370 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 4,144 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 287 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து கரோனா தொற்றை தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.