காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

காவிரியில் தண்ணீர் திறப்பு: கதவணைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு

மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

News image
காவிரியில் தண்ணீர் திறப்பு: கதவணைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
Updated On :14 ஜூன் 2021, 10:38 am

DIN

எடப்பாடி: பாசன பயன்பாட்டிற்க்காக அண்மையில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

டெல்டா பகுதி பாசனத்திற்காக ஆண்டு தோறும் ஜுன் - 12 ல் மேட்டூர் அணை  திறக்கப்படுவது வழக்கம். நிகழ் ஆண்டில் அணையில் போதிய நீர் இருப்பு உள்ள நிலையில், கடந்த 12ந்தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாசனப் பயன்பாட்டிற்காக மேட்டூர் அணையினை திறந்து வைத்தார். இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. 

இதனால் காவிரியின் குறுக்கே  செக்கனூர், நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கதவணைகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இங்குள்ள நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிரித்துள்ளதாக சமந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கதவணைக்கரையோரப்பகுதியில் போதிய நீர் இருப்பு உள்ள நிலையில், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர் வகைகளை சாகுபடி செய்திட தாயாராகி வருகின்றனர்.

நிகழாண்டில் பாசனப்பயன்பாட்டிற்காக காவரியில் உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், தடையின்றி நீர் திறப்பு இருந்திடும் நிலையில், இப்பகுதியில் கூடுதல் மகசூல் பெற வாய்புள்ளதாக தெரிவித்தனர்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், பூலாம்பட்டி பகுதியில் உள்ள கதவணை நீர்மின் நிலையம் வழியாக பாய்ந்து செல்லும் காட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.