சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜூன் 17-ஆம் தேதி புது தில்லி சென்று அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச உள்ளார். பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், இரு தலைவர்களின் சந்திப்பு இன்று உறுதியானது.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் ஸ்டாலின் முதல் தில்லி பயணமாக இது அமையும்.
இதற்காக அவர் ஜூன் 16-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு தில்லி செல்ல உள்ளார். 17-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார்.
இதையும் படிக்கலாமே.. கரோனாவின் கோரத் தாண்டவம்: பெற்றோரை இழந்து பச்சிளம் தம்பியுடன் தவிக்கும் சிறுமி
இந்த சந்திப்பின் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் தரப்பில், தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை அளிக்கப்பட உள்ளது. ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்குதுல், தமிழகத்துக்கு கூடுதலாக கரோனா தடுப்பூசி வழங்க வேண்டும், மத்திய அரசு சார்பில் வழங்க வேண்டிய பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிலுவைத் தொகைகள், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை அளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மறுநாள் 18-ஆம் தேதி புது தில்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியையும் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசவிருப்பதாக தில்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் தெரிவித்துள்ளார்
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்துக்கு அதிகளவில் கரோனா தடுப்பூசியை ஒதுக்குவது, செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
திருச்சி - தஞ்சை சாலையில் விஜய் வாகனத்தை சூழ்ந்த தொண்டர்கள்!

திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சை வந்த விஜய்!

நான்-ஸ்டிக் பயன்படுத்தலாமா? வாங்கிய பாத்திரத்தை என்ன செய்வது?

பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

