சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்: அவிநாசி அருகே பணிகள் தொடக்கம்

'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் அவிநாசி தொகுதியில் முதற்கட்டமாக செம்பியநல்லூரில் திட்டப்பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:27 am

DIN

அவிநாசி: முதல்வர் 100 நாள் குறைதீர் திட்டமான 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் அவிநாசி தொகுதியில் முதற்கட்டமாக செம்பியநல்லூரில் திட்டப்பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லூர் ஊராட்சி எஸ். மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்கக்கோரி முதல்வர் 100 நாள் குறைதீர் திட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்திருந்தனர்.

இதையடுத்து செம்பியநல்லூர் ஊராட்சி எஸ்.மேட்டுப்பாளையத்தில் ரூ. 5.71 லட்சத்தில் வடிகால் வசதியும், நாதம்பாளையம் பகுதியில் ரூ.8.15 லட்சத்தில் கான்கிரீட் சாலை என மொத்தம் ரூ.13.86 லட்சத்தில் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் சுதா வேல்முருகன், துணைத் தலைவர் தனலட்சுமி தங்கவேல், உறுப்பினர் கௌரி சிட்டிபாபு, திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஈ.ப.சிவபிரகாஷ், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வர் 100 நாள் திட்டத்தில் கோரிக்கை மனு அளித்து, திட்டப்பணிகள் தொடங்கப்பட்டதையடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.