மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

‘நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்க வேண்டும்’: முதல்வர்

நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
Updated On :23 ஜூன் 2021, 10:01 am

DIN

நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 21ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று, நிகழ்வாண்டில் நீட் தேர்வு நடைபெறுமா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து தமிழக முதல்வர் பேசியதாவது,

பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது, நீட் தேர்வு வேண்டாம் என 4, 5 முறை வலியுறுத்தினேன். 2010ஆம் ஆண்டில் விருப்பமுள்ள மாநிலங்கள் மட்டும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்ற நிலைமை இருந்தது. ஆனால், தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற போராடுவோம்; வெற்றி பெறுவோம். அதற்கு அதிமுகவும் துணை நிற்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் விலக்கு பெறுவோம் என்றோம், அதில் உறுதியாக உள்ளோம். நீதிபதி ஏ.கே.ராஜன் அளிக்கும் அறிக்கையை வைத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் பதிலளித்த பின், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியும் உறுதியளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.