தைராய்டு, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்கள் யோகா பயிற்சியால் சீராகும்: மருத்துவர் சுஜாதா கோடா

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில்
தைராய்டு, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்கள் யோகா பயிற்சியால் சீராகும்: மருத்துவர் சுஜாதா கோடா
தைராய்டு, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்கள் யோகா பயிற்சியால் சீராகும்: மருத்துவர் சுஜாதா கோடா

தஞ்சாவூர்: மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் “யோகக்கலை முன்வைக்கும் நோய்த்தடுப்பு வழிமுறைகள்” – சர்வதேச யோகா நாள் சிறப்பு இணையவழிக் கருத்தரங்கு இன்று நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய யோக சித்தி நிறுவனத்தின் இணை இயக்குநர் மருத்துவர் சுஜாதா கோடா, யோகக்கலை ஆறாயிரம் வருடத்திற்கு மேல் பயன்பாட்டில் உள்ளது. பதஞ்சலி முனிவர் தான் யோகக் கலையின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.

யோகக்கலையை மூச்சுப்பயிற்சி, ஆசனங்கள், ஒருமுகப்படுத்துதல் என்பன போன்று 8 பிரிவாக வகைப்படுத்தலாம். இதில் சுமார் 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன. மன அழுத்தம், சுவாசக் கோளாறு, செரிமணக் கோளாறு, தைராய்டு, நீரிழிவு,  இருதய நோய் போன்ற அனைத்து வகையான நோய்களை வராமல் கட்டுப்படுத்தவும், அப்படி வந்தாலும் அதனை முழுமையாகக் குணப்படுத்தவும் யோகக் கலையால் முடியும். 

சுவாசப் பயிற்சியில் 8 வகைகள் உள்ளன. இதன் மூலம் நமது உடல் வெப்பநிலையை மாற்றியமைக்க முடியும். இதனால் நமது உடலில் பல்வேறு வியாதிகள் வராமல் முற்றிலும் தடுக்க முடியும். அதோடு உணவே மருந்து என்ற அடிப்படையில் நாம் நம் உணவுக்காக அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பொருள்கள் மூலமே பெரும்பாலான நோய்களை வராமல் தடுக்க முடியும். எனவே அனைவரும் யோகாவைக் கற்றுக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை நோயில்லாத, நல்வாழ்வாக வாழ வேண்டும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய தமிழ்நாடு - புதுச்சேரியின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் ஜெ.காமராஜ், 7- ஆவது ஆண்டு சர்வதேச யோகா நாள் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் சர்வதேச அளவில் பல்வேறு கோணங்களில் யோகா குறித்த ஆராய்ச்சி அதிகரித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் உடலையும், மனத்தையும் முறைப்படுத்த மிகச்சிறந்த கருவியாக யோகா உள்ளது. யோகக் கலையின் மூலம் பல்வேறு நோய்கள் குணப்பட்டுத்தப் பட்டிருப்பதாகவும், கரோனா போன்ற தொற்றுக் காலத்தில் யோகாவை முறையாகக் கற்று அனைவரும் தங்கள் வாழ்வில் பயனடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com