திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மருத்துவர் காமேஸ்வரன் மறைவு: ஸ்டாலின் இரங்கல்

பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவர் காமேஸ்வரன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image
மருத்துவர் காமேஸ்வரன் மறைவு: ஸ்டாலின் இரங்கல்
Updated On :26 ஜூன் 2021, 7:17 am

DIN

பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவர் காமேஸ்வரன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் மோகன் காமேஸ்வரனின் தந்தை காமேஸ்வரன் மறைந்த செய்தி அறிந்ததும், மோகன் இல்லத்துக்குச் சென்று, மறைந்த காமேஸ்வரன் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.  தனது ஆழ்ந்த இரங்கலையும் மோகனிடம் தெரிவித்துக் கொண்டார்.

Story image

மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,  பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தந்தையும், பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ்மிக்க மருத்துவருமான காமேஸ்வரன் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்கும், வேதனைக்கும் உள்ளானேன். 

அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர் காமேஸ்வரன் அவர்கள் தனித்துவமிக்க காது, மூக்கு, தொண்டை மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர். எண்ணற்ற இளம் மருத்துவர்களை உருவாக்கியவர். 

50 ஆண்டுகளுக்கும் மேல் மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கில் நற்பெயர் ஈட்டித் தந்த பெருமைக்குரியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு ஈடு இணையற்ற நண்பராக இருந்தவர்.

தனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய தந்தையை இழந்து வாடும் காது மூக்குத் தொண்டை நிபுணர் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.