வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கரோனா பரவலை பூஜ்ஜியமாக்க தீவிரமாக பணியாற்றுகிறார் முதல்வர்: அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்றே நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

News image
ஏமூரில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை தொடக்கி வைத்த அமைச்சர் செந்தல்பாலாஜி.
Updated On :27 ஜூன் 2021, 1:43 pm

DIN


தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்றே நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியதை அடுத்து தடுப்பூசி போடும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், கோவில் பூசாரிகள் ஆகியோருக்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில், ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கேச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்த பயன்படும் வானங்களை ஞாயிற்றுக்கிழமை மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, ஏமூரில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் செந்தல்பாலாஜி தொடக்கி வைத்தார். 

பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “தமிழ்நாட்டில் கரோனா பரவலை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்றே நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.

Story image

ஏமூரில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை தொடக்கி வைத்த அமைச்சர் செந்தல்பாலாஜி.

தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கரூர் மாவட்டத்தில், 6,079 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒருவருக்குக் கூட விடுபடாமல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதற்காக, ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு வாகனம், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

இதையடுத்து வெங்கமேடு பெரியகுளத்துப்பாளையத்தில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில், அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். 5 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 பேருக்கு உதவித்தொகைகள் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. சில மனுக்கள் தவிர பிற மனுக்களுக்கு 30 நாள்களில் தீர்வு காணப்படும், தேர்தலில் முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.