கம்பம் அருகே 6 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 நிதி உதவி
தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 நிதி உதவியை ஆசிரியர்கள் வழங்கி வருகிறார்கள்.


கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 நிதி உதவியை ஆசிரியர்கள் வழங்கி வருகிறார்கள்.
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக வீரமணி, பள்ளியில் முதுகலை ஆசிரியர் மாதவன்ராஜா, பட்டதாரி ஆசிரியர் ஷபி அகமது, ஆசிரியை ராதிகா ஆகியோர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஊரில் உள்ள பெற்றோர்களை சந்தித்து பேசினார்.
கரோனா பொதுமுடக்க காலத்தில் வாழ்வாதாரம் இழந்த அவர்கள் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு பொருளாதாரம் குறைவால் தயங்கினார்கள்.
இதனால் இப்பள்ளியின் ஆசிரியர்கள் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவ மாணவிகளுக்கு நிதி உதவி வழங்க முடிவு செய்தனர், அதன்பேரில் ஆறாம் வகுப்பு சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு ரூ.1000 நிதியை அவர்களது பெற்றோர்களிடம் வழங்கினர்.
இதன் மூலம் பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் எடுத்த நடவடிக்கையை பெற்றோர் ஆசிரியர் கழகம் பாராட்டியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...