ஆம்பூர் அருகே கார் விபத்து: மாப்பிள்ளை உள்பட மூவர் பலி
ஆம்பூர் அருகே செங்கிலிகுப்பம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் மூவர் சம்பவ இடத்தில் பலி. ஒருவர் காயம்.


ஆம்பூர்: ஆம்பூர் அருகே செங்கிலிகுப்பம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இறந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
சென்னையை சேர்ந்த வேணுகோபால் (26) என்பவருக்கு ஓசூரில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வேணுகோபாலின் தந்தை சந்திரமவுலி (55), தாய் வசுந்தராதேவி (45) தாத்தா ராணிப்பேட்டையை சேர்ந்த கண்ணையர் (94), மாப்பிள்ளை வேணுகோபால் ஆகிய 4 பேரும் ஒரே காரில் சென்று விட்டு ஓசூரில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி முடித்து கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கார், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் செங்கிலிகுப்பம் கிராமம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாைனது.

விபத்தில் திருமண மாப்பிள்ளை வேணுகோபால், வேணுகோபாலின் தாத்தா ராணிப்பேட்டையை சேர்ந்த
கண்ணயர்
(94), தாய் வசுந்தரா தேவி (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர்.
தாய் வசுந்தரா தேவி
தந்தை சந்திரமவுலி படுகாயமடைந்தார் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
வேணுகோபால்
இறந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...