நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :28 ஜூன் 2021, 7:40 am

DIN

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு 30 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயாா் அற்புதம்மாள் தல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தாா்.

இதையடுத்து பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. கடந்த மே 28 ஆம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து பரோல் விடுப்புக்காக விடுவிக்கப்பட்டார். 

இதனிடையே கடந்த 19 ஆம் தேதி, பேரறிவாளனுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. சிகிச்சை தொடா்ச்சியாக அளித்தால்தான் நன்மை என டாக்டா்கள் கூறுவதால் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும் என அவரது தாயாா் அற்புதம்மாள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.