புதுவையில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அரசு சார்பில் ரூ. 3.91 கோடி நிதியுதவி
புதுவையில் மத்திய அரசின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தொழில் தொடங்க நிதி வழங்கப்பட்டு வருகிறது.


புதுவையில் மத்திய அரசின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தொழில் தொடங்க நிதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
முதல்வர் என்.ரங்கசாமி பங்கேற்று ரூ. 3.91 கோடி மதிப்பில் நிதியுதவித் திட்டங்களை மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்புகளுக்கு வழங்கினார். நலிவுற்றோர் குறைப்பு நிதி, சமுதாய மூலதன நிதி, விவசாய மகளிர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பண்ணை கருவிகள் வாடகை நிலையம் ஏற்படுத்துவதற்கான நிதி ஆகிய திட்டங்களின் கீழ், மகளிர் குழுவினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. அமைச்சர் க. லட்சுமிநாராயணன், அதிகாரிகள் மற்றும் மகளிர் குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...