தொழில் வளர்ச்சியில் முதலிடம் பெறுவதே இலக்கு: மு.க.ஸ்டாலின்

தொழில் வளர்ச்சியில் முதலிடம் பெற வேண்டும் என்பதே தொழில் துறையில் தமிழக அரசின் இலக்கு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தொழில் வளர்ச்சியில் முதலிடம் பெற வேண்டும் என்பதே தொழில் துறையில் தமிழக அரசின் இலக்கு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கோடி கார் உற்பத்தி நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். 

அப்போது அவர் பேசியதாவது, கார் தயாரிப்பில் மட்டுமின்றி சேவை மனப்பான்மையிலும் ஹூண்டாய் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கரோனா நிவாரணமாக ரூ.5 கோடி வழங்கி உதவிய ஹூண்டாய் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

1996-ம் ஆண்டு ஹூண்டாய் கார் தொழிற்சாலைக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். 

ஸ்ரீபெரும்புதூரை உலக வரைபடத்தில் முக்கிய இடமாக மாற்றியதில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு முக்கியப் பங்கு உள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தைப் போன்று மற்ற நிறுவனங்களும் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். 

தெற்காசியாவிலேயே முதலீடுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதே இலக்கு.

தமிழகத்தின் மீது உலக நாடுகளின் கவனம் குவியும் வகையில் திட்டங்களை வகுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு முடிவுகள் ஆய்வு செய்து மேம்பாட்டு திட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

மிகக் குறுகிய காலத்தில் தொழில் துறையில் தமிழக அரசு நம்பிக்கையின் அடையாளமாக வளர்ச்சியடைந்துள்ளது.

புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும், பழைய தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும். 

ஒரே இடத்தில் தொழிற்சாலைகள் குவியாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும். 

ஹுண்டாய் நிறுவனத்தின் உற்பத்தியை கருணாநிதி தொடக்கி வைத்தார். அப்போது 5வது இடத்தில் இருந்த தமிழகத்தை மூன்றாவது இடத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்து அவ்வாறே செய்து முடித்தார்.

நான் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை முதலிடத்திற்கு கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன். அதற்கு தொழில் நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும்.

ஹுண்டாய் நிறுவனத்தின் சாதனைக்கு உறுதுணையாக உள்ள தொழிலாளர்களுக்கு வாழ்த்துகள் என்று ஸ்டாலின் பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com