

ஒரத்தநாட்டில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள், காவி துண்டு அணிவித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் பெரியார் சிலை உள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு பெரியார் உருவச் சிலைக்கு மர்ம நபர்கள், காவித் துண்டு அணிவித்ததோடு, தலைக்கு தொப்பியும் அணிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வைத் தொடர்ந்து பெரியார் சிலையை சுற்றி காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறைனர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இச்சம்பவத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.