மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் மயிலாடுதுறையில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திடுகிறார் டிஆர்ஓ எஸ்.முருகதாஸ். உடன், ஆர்டிஓ ஜெ.பாலாஜி, வட்டாட்சியர் பி.பிரான்சுவா உள்ளிட்டோர்.









