6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தினமலர் முன்னாள் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி காலமானார்

தினமலர் முன்னாள் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான  இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார். அவருக்கு வயது 88.

News image
தினமலர் முன்னாள் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி காலமானார்
Updated On :5 மார்ச் 2021, 2:21 am

DIN

தினமலர் முன்னாள் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான  இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார். அவருக்கு வயது 88.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி, தினமலர் நாளிதழ் ஆசிரியராக பணியாற்றினார். 

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடீவீஸ்வரம் என்ற கிராமத்தில் 1933-ஆம் ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி பிறந்தவர்.  இவரது தந்தை டி.வி.ராமசுப்பையருக்கு பிறகு தினமலர் ஆசிரியர் பொறுப்பேற்ற இவர், தினமலர் நாளிதழை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்தார். 

திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, புதுச்சேரி, வேலூர், நாகர்கோவில் நகரங்களில் தினமலர் பதிப்புகளை துவக்கக் காரணமாக இருந்தவர். 2017 வரை ஆசிரியர் பொறுப்பு வகித்தார்.

இவர் சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை கண்டுபிடித்து பெரும் ஆய்வு மேற்கொண்டவர்.

நாளிதழில் தமிழ் எழுத்து சீர்திருத்தம் முதன் முதலில் கண்டவர், கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எழுத்துருக்களை உருவாக்கியவர் என்ற பெருமையையும் கொண்டவர். நாணயவியல் தொடர்பாக 30 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார்.

தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது. தமிழுக்கு இவர் செய்த நற்பணியை பாராட்டி 2012-2013 ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது குடியரசுத் தலைவரால் இவருக்கு வழங்கப்பட்டது.

பத்திரிகை துறையில் சிறந்து விளங்கியதால் தமிழ் அச்சு மொழி வளர்ச்சியைப் பண்படுத்தியவர். கணினிக்கு ஏற்றவகையில், தமிழ் எழுத்துக்களை நவீனப்படுத்தி, தெளிவுமிக்க தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியவர். இப்படி, பன்முகத்திறன்கள் படைத்த முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி இன்று வியாழக்கிழமை காலமானார்.

இவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.