மதுரை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்தார்.
மதுரை ஐராவத நல்லூரில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை சார்பாக ராம ரத யாத்திரை தொடங்கி வைக்க வருகை தந்த மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே..சிங் செய்தியாளர்களிடம் கூறியது:
இன்று ஒரு முக்கியமான நாள். ராம ரத யாத்திரையை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். நாடு முழுவதும் ராமர் ரத யாத்திரைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ரத யாத்திரை செல்லும் இடங்களில் சிறுவர்கள், பொதுமக்கள், தொழில் நடத்துபவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற நிதியை மனமுவந்து அளிக்கின்றனர்.
மேலும் ராமர் ஆலயம் கட்டப்படுவதை நாடு முழுவதும் உள்ள மக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ராமர் ஆலயம் கட்டப்படுவதோடு ராம ராஜ்ஜியம் உருவாக்கப்படும்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்து வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கப்படும்.
தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சியடைந்துள்ளது. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது சுழற்சிமுறையில் ஏற்ற இறக்கங்களுக்கு உள்பட்டது. சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப விலை நிலவரங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.
கடந்த 2011 - 2014 ஆகிய ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை ரூ.1,240 ஆக இருந்தது. தற்போது ரூ.750 என்ற அளவில்தான் உள்ளது. பெட்ரோல் விலை உயர்வு மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பெட்ரோல் டீசல் விற்பனை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படலாம் என்ற ஆலோசனையும் உள்ளது. மேலும் இதுதொடர்பாக மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

யானைகள் நடமாட்டம்! குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை!

மேக்கேதாட்டு அணை; கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கம்!

இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நன்றி: கார்கில் போர் நினைவுநாளில் பிரதமர் மோடி
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



